/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக அணை பகுதிகளில் சுற்றுலா உட்கட்டமைப்பு
/
தமிழக அணை பகுதிகளில் சுற்றுலா உட்கட்டமைப்பு
ADDED : ஏப் 24, 2025 07:11 AM
கோவை; கடந்த 2023ம் ஆண்டு, தமிழகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடி ஆக இருந்த நிலையில், 2024ம் ஆண்டு, 30.80 கோடியாக அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில், நாடு தழுவிய அளவில் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
மாநிலத்தில் சுற்றுலா திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, திருப்பூர் அமராவதி, கோவை மாவட்டம் ஆழியாறு, ஈரோடு பவானிசாகர், சேலம் மேட்டூர், கிருஷ்ணகிரி, தேனி வைகை ஆகிய அணைப்பகுதிகளில் சிறந்த சுற்றுலா உட்கட்டமைப்பு ஏற்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இப்பகுதிகளில், சுற்றுலாப் பயணிகளை கவர, என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு நியமித்து, ரூ.2 கோடியில் சிறப்பு மேம்பாட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்டுகிறது. குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை சமர்பித்த பின், குறிப்பிட்ட பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளன.

