ADDED : மார் 29, 2026 09:08 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள், பெங்களூருவிற்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள பகவான்ஹால் பகுதியில் நேற்று பஸ் சென்ற போது போலீசார் சோதனையிட்டனர். பஸ்சில், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி, தாவூத் இப்ராஹிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
பஸ்சை பறிமுதல் செய்து , போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். கோவையை சேர்ந்த தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். தனியார் பஸ் உரிமையாளர் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. உரிமையாளர் விவரம் குறித்து விசாரிக்க, கோவை மாநகர போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்கள் இறக்கி விடப்பட்டு, சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாற்று பஸ் வசதி செய்யப்பட்டது.
