/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாகம் தீர்க்க வந்த யானைகள்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
தாகம் தீர்க்க வந்த யானைகள்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
தாகம் தீர்க்க வந்த யானைகள்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
தாகம் தீர்க்க வந்த யானைகள்: சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : நவ 16, 2025 12:59 AM

வால்பாறை: வால்பாறையில், அணைப்பகுதியில் தாகம் தீர்க்க வந்த யானைக்கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணியர் குதுாகலமடைந்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக உள்ளதால், யானைகள் அதிக அளவில் உலா வருகின்றன.
ஸ்டேன்மோர், வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதை, பன்னிமேடு, வில்லோனி, சோலையாறு, முத்துமுடி, ஷேக்கல்முடி, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்ட மாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைக்கூட்டம் அருகில் உள்ள சோலையாறு அணையில் பகல் நேரத்தில் கூட்டமாக சென்று தண்ணீர் பருகியது. அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் யானைக்கூட்டத்தை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
வீடு சேதம் வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒற்றை யானை, தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஒரு வீட்டின் முன்பக்க ஜன்னல், சமையல் அறையை உடைத்து சேதப்படுத்தியது. வீட்டில் துாங்கி கொண்டிருந்த பார்வதி என்பவர், அருகில் உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று தப்பினார்.
எஸ்டேட் தொழிலாளர்கள், அரை மணி நேர போராட்டத்துக்கு பின் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டினர்.

