/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலா வரும் கரடியால் சுற்றுலா பயணியர் பீதி
/
உலா வரும் கரடியால் சுற்றுலா பயணியர் பீதி
ADDED : ஆக 14, 2025 08:36 PM
வால்பாறை; வால்பாறை நகரில் மாலை நேரத்தில் குட்டியுடன் உலா வரும் கரடியால் சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணியர் தங்கி செல்கின்றனர். நகரப்பகுதியில் சமீப காலமாக இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளது. தெருநாய்களையும், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களையும் குறிவைத்து சிறுத்தை கவ்வி செல்கிறது.
இந்நிலையில், சிறுத்தையை தொடர்ந்து வால்பாறை நகரில் கரடியும் உலா வரத்துவங்கியுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த காமராஜ் நகர் பகுதியில் மாலை நேரத்தில் குட்டியுடன் கரடிஉலா வரும் காட்சியை அப்பகுதி மக்கள் கண்டு பீதியடைந்துள்ளனர். தங்கும்விடுதிகள் நிறைந்துள்ள காமராஜ்நகரில் சிறுத்தையை தொடர்ந்து கரடியும் உலா வருவதால், சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர்.