/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்
/
கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 28, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்; கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. அடர் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, போளுவாம்பட்டி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மழை காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு, 22 முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை தினமான நேற்று, காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தனர். நேற்று, 1,050 சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.