/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா தலங்களில் வசதிகளில்லை: ஆர்வத்துடன் வருவோர் ஏமாற்றம்
/
சுற்றுலா தலங்களில் வசதிகளில்லை: ஆர்வத்துடன் வருவோர் ஏமாற்றம்
சுற்றுலா தலங்களில் வசதிகளில்லை: ஆர்வத்துடன் வருவோர் ஏமாற்றம்
சுற்றுலா தலங்களில் வசதிகளில்லை: ஆர்வத்துடன் வருவோர் ஏமாற்றம்
ADDED : நவ 05, 2025 08:12 PM

வால்பாறை: வால்பாறையிலுள்ள சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலையடுத்து, வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வனத்துறை சார்பில், அட்டகட்டியில் ஆர்க்கிட்டோரியம், இருவாச்சி பறவை வியூ பாயின்ட், தலநார், நல்லமுடி வியூ பாயின்ட், சின்னக்கல்லாறு அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
ஆனால், இந்த இடங்களில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்து, வால்பாறைக்கு சுற்றுலா வருகிறோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள், தட்பவெப்ப நிலையால் ஈர்க்கப்பட்டு இங்கு வருகிறோம். மலைப்பாதையில் வாகனத்தில் பயணம் செய்யும் போது, இடையிடையே சிங்கவால் குரங்குகள், வரையாடு, யானை, காட்டுமாடு போன்ற வன விலங்குகளை கண்டு ரசிக்கிறோம்.
வனத்துறை சார்பில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல, ஒவ்வொரு பகுதியிலும், 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அங்கு கழிப்பிடம், அருவி அருகில் உடை மாற்றும் வசதிகள் இல்லை. இதனால், பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்து வந்து சிரமத்துக்கு உள்ளாகிறோம். வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணியருக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

