/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணியர்
/
கவியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணியர்
ADDED : ஜூலை 13, 2025 08:43 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவியில் சுற்றுலாப்பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிக்கு, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவி, தண்ணீர் வரத்து இல்லாததால், கடந்த பிப்., மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டது.
கடந்த, மே மாதம் இறுதியில் இருந்து, மேற்குத்தொடர்ச்சி மலையில் நீடித்த கனமழையால், அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அவ்வப்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டது.
மழைப்பொழிவு குறைந்து, நீர் வரத்து சீரானதையடுத்து கடந்த, 6ம் தேதி முதல் சுற்றுலாப்பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, வெளியூர் சுற்றுலாப்பயணியர், அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். விடுமுறை நாளான கடந்த, இரண்டு நாட்களுக்கு சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.