/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியூ பாயிண்டில் இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
/
வியூ பாயிண்டில் இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
வியூ பாயிண்டில் இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
வியூ பாயிண்டில் இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 04, 2025 08:09 AM

மேட்டுப்பாளையம்; கோத்தகிரி சாலை வியூ பாயிண்டில் ரம்மியமாக காட்சியளிக்கும் இயற்கை காட்சிகளை அதிகளவில் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1900 மீட்டர் உயரத்தில் குஞ்சப்பனை அருகே வியூ பாயிண்ட் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சுற்றுலா பயணிகள் வியூ பாயிண்டில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் அதில் வளைந்து நெளிந்து செல்லும் பவானி ஆற்றின் அழகை ரசிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மேக கூட்டங்கள் வியூ பாயிண்டின் அருகில் செல்கின்றன. அங்கு இருந்து பார்க்கும் போது மேட்டுப்பாளையம் பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் வியூ பாயிண்டில் நின்று செல்பி மற்றும் போட்டோக்கள் எடுத்து மகிழ்கின்றனர்.--