/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டாப்சிலிப்'பில் திரண்ட சுற்றுலாப் பயணியர்
/
'டாப்சிலிப்'பில் திரண்ட சுற்றுலாப் பயணியர்
ADDED : அக் 02, 2025 08:49 PM
பொள்ளாச்சி:ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, சுற்றுலாப் பயணியர்களால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளிலும் முன்பதிவு காணப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு டாப்சிலிப் யானைகள் முகாம், கவியருவி, சிறு குன்றா, அட்டகட்டி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
சுற்றுலாப் பயணியர் தங்கிச் செல்வதற்காக, டாப்சிலிப், சேத்துமடை, அட்டக்கட்டி, சிறுகுன்றா, சின்னாறு, அமராவதி என, பல்வேறு இடங்களில், 39 வனத்துறை தங்கும் விடுதிகள் உள்ளன.
அவ்வகையில், அறையின் வசதிக்கு ஏற்ப 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது, ஆயுதபூஜையொட்டி இரு தினங்கள், காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பலரும், ஆன்லைன் வாயிலாக தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளர்.
வனத்துறையினர் கூறுகையில், 'விடுமுறை தினங்களில், அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள், வனத்துறை விடுதிகளில் தங்க ஆர்வம் காட்டுகின்றனர். இரு தினங்களாக, சுற்றுலாப் பயணியரின் வருகை அதிகரித்தே காணப்பட்டது,' என்றனர்.