/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டின் வளைவு பகுதி சேதமடைந்ததால் அதிருப்தி
/
ரோட்டின் வளைவு பகுதி சேதமடைந்ததால் அதிருப்தி
ADDED : அக் 02, 2025 08:47 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு மயானம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதி சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட மயானம் செல்லும் வழியில், தினமும் அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த ரோட்டின் வளைவில் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க பல நாட்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால், இன்று வரை ரோடு சீரமைப்பு பணி துவங்கவில்லை.
இதனால், இந்த ரோட்டில் வளைவு பகுதியில் செல்லும் போது வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். இரவு நேரத்தில் இங்கு வெளிச்சம் இல்லாததால் பலர் கீழே விழுகின்றனர். இது மட்டுமின்றி, இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், பலர் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, இந்த ரோட்டை கிணத்துக்கடவு பேரூராட்சி அதிகாரிகள் விரைவில் சீரமைக்க வேண்டும், என, மக்கள், வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.