/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவியருவியில் திரண்ட சுற்றுலாப் பயணியர்l தொடர் விடுமுறையால் குதுாகலம்
/
கவியருவியில் திரண்ட சுற்றுலாப் பயணியர்l தொடர் விடுமுறையால் குதுாகலம்
கவியருவியில் திரண்ட சுற்றுலாப் பயணியர்l தொடர் விடுமுறையால் குதுாகலம்
கவியருவியில் திரண்ட சுற்றுலாப் பயணியர்l தொடர் விடுமுறையால் குதுாகலம்
ADDED : நவ 01, 2024 10:21 PM

பொள்ளாச்சி ; தீபாவளியையொட்டி தொடர் விடுமுறையால், பொள்ளாச்சி அடுத்துள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப்பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி ஆகிய பகுதிகள் உள்ளன.
தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, குடும்பத்துடன் பொழுதை கழிக்க பலரும், இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வகையில், நேற்று, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த சுற்றுலாப் பயணியர், ஆழியாறு பகுதியில் திரண்டனர். இதனால், அவ்வழித்தடத்தில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஆழியாறு பூங்காவிற்குள் செல்ல அனுமதிச்சீட்டு வாங்கும் 'கவுன்டர்' முன்பு, நீண்ட வரிசையில் காத்திருந்து சீட்டு வாங்கிச்சென்றனர். பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில், கூட்டம் அதிகம் காணப்பட்டது.
விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல, வால்பாறை செல்லும் வழித்தடத்தில் உள்ள கவியருவியிலும், சுற்றுலாப் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்துடன் பலரும், அங்கு குளித்து மகிழ்ந்தனர்.
வனத்துறையினர் கூறியதாவது: தொடர் விடுமுறை என்பதால் வால்பாறைக்கு அதிகப்படியான சுற்றுலாப்பயணியர் வருகை புரிந்தனர். அவர்களில் பலரும் கவியருவிக்கு சென்ற பின்னரே மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.
அவர்களின் வருகை அதிகரித்ததால், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. வனக்குழுவினர், வழித்தடங்களில் ஆங்காங்கே முகாமிட்டு, வனப்பகுதிக்குள் அத்துமீறும் சுற்றுலாப்பயணியரை கண்டறிந்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.