/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணியர்
/
ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணியர்
ADDED : ஏப் 14, 2025 10:18 PM

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி பகுதிகள் உள்ளன. நேற்று, தமிழ்ப் புத்தாண்டையொட்டி, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிந்தனர். பகலில் கடும் வெயில் நிலவியதால், அதிகப்படியான சுற்றுலா பயணியர் கவியருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த ஒரு வாரமாக, தண்ணீர் வரத்து இல்லாததால், கவியருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று, விடுமுறை தினத்தையொட்டி, அங்கு சுற்றுலாப் பயணிகள், அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததை அறிந்து, அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது:பகலில் வெயில் அதிகம் இருந்ததால், பூங்காவை சுற்றிப் பார்த்த பலரும், கவியருவிக்கு சென்று குளிக்க ஆர்வம் காட்டினர். அதேநேரம், சுற்றுலா பயணியர் விதிமீறலை தடுக்க வேட்டைத் தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்' என்றனர்.