/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் சுற்றுலா பயணியர் உறைபனியால் உற்சாகம்
/
மூணாறில் சுற்றுலா பயணியர் உறைபனியால் உற்சாகம்
ADDED : டிச 22, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறில் நேற்று, தொடர்ந்து இரண்டாம் நாளாக உறைபனி ஏற்பட்ட நிலையில், அதனை காண சுற்றுலாப் பயணியர் உற்சாகமாய் குவிந்தனர்.
மூணாறில் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே உறைபனி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தொடர்ந்து இரண்டாம் நாளாக பல பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. குறிப்பாக மூணாறைச் சுற்றி பெரியவாரை, கன்னிமலை, சிவன் மலை, லெட்சுமி, தேவிகு ளம் ஓ.டி.கே., சைலன்ட்வாலி உட்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும், பாம்பாடும்சோலை தேசிய பூங்காவிலும் உறைபனி ஏற்பட்டது. அதனை காண, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணியர் குவிந்தனர்.

