/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெடல் படகில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
/
பெடல் படகில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
பெடல் படகில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
பெடல் படகில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்
ADDED : டிச 29, 2025 03:31 AM

மூணாறு: மூணாறு மாட்டுப்பட்டி அணையில் பெடல் படகில் பயணிக்கச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மூணாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் மாட்டுப்பட்டி அணை உள்ளது. முக்கிய சுற்றுலாப் பகுதியான இங்கு, மாவட்ட சுற்றுலாத்துறை, மின்வாரியத்தின் 'ஹைடல் டூரிசம்' சார்பில் அதிவேக சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. அவை சுற்றுலாப் பயணிகள் இடையே மிகவும் பிரசித்து பெற்றவையாக உள்ளன. இதுதவிர அணையின் நுழைவுப் பகுதியில் 'ஹைடல் டூரிசம்' சார்பில் பெடல் படகு, பைபர் மூலம் உருவாக்கப்பட்ட கயாக்கிங் படகு, பரிசல் ஆகியவையும் இயக்கப்படுகின்றன. அவற்றில் பரிசல் தவிர பெடல், கயாக்கிங் ஆகியவை சுயமாக இயக்கி கொள்ளலாம். அதனால் அவற்றில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கட்டணம் பெடல் படகு - குழந்தை உள்பட மூன்று பேருக்கு ரூ.400. கயாக்கிங் இருவருக்கு ரூ.400, ஒருவருக்கு ரூ.250. பரிசல் 4 பேருக்கு ரூ.600. அரை மணி நேரம் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

