/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு-பர்லியார் மலையேற்றத்திற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
கல்லாறு-பர்லியார் மலையேற்றத்திற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்
கல்லாறு-பர்லியார் மலையேற்றத்திற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்
கல்லாறு-பர்லியார் மலையேற்றத்திற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : அக் 15, 2025 11:55 PM

மேட்டுப்பாளையம்: -: கல்லாறு-பர்லியார் இடையே 3.5 கி.மீ., தூரம் மலையேறுவதற்கு, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 1,050 பேர் மலையேற்றம் மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு-பர்லியார் இடையே மலையேற்றம் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் துவங்கியது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைகள் உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன.
மலையேற்றம் செல்லும் போது சுற்றுலா பயணிகள் நீரோடைகளுக்கு தாகம் தீர்க்க வரும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால், இத்திட்டம் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரக வனவர் சிங்காரவேலன் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் கல்லாறு - பர்லியார் வழித்தடம் கண்டறியப்பட்டு, சுற்றுலா பயணிகள் மலையேற்றம் மேற்கொண்டு வருகின்றனர். மலையேற்றம் வழிகாட்டிகளாக 6 பழங்குடியின மக்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டியாகவும், பறவை காணுதல், முதலுதவி சிகிச்சை அளித்தல், உணவு தயாரித்து வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கல்லாறு - பர்லியார் இடையே 3.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இணையத்தில் பதிவு செய்து தான் வரவேண்டும்.
செவ்வாய்கிழமை மட்டும் விடுமுறை. மற்ற நாட்களில் மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை 1,050க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் மேற்கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு மிகவும் புது அனுபவமாக அமைந்துள்ளது. அதே சமயம் பழங்குடியின மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.---