/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து கடமைகளை நிறைவேற்ற உறுதி: ஆர்.எஸ்.எஸ். விழாவில் வலியுறுத்தல்
/
ஐந்து கடமைகளை நிறைவேற்ற உறுதி: ஆர்.எஸ்.எஸ். விழாவில் வலியுறுத்தல்
ஐந்து கடமைகளை நிறைவேற்ற உறுதி: ஆர்.எஸ்.எஸ். விழாவில் வலியுறுத்தல்
ஐந்து கடமைகளை நிறைவேற்ற உறுதி: ஆர்.எஸ்.எஸ். விழாவில் வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2025 11:55 PM

சூலுார்: குடும்ப நலன், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட ஐந்து கடமைகளை நிறைவேற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும், என, ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
சூலுார் மண்டல ஆர்.எஸ்.எஸ்., சார்பில், விஜய தசமி விழா மற்றும் நூற்றாண்டு விழா சூலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் சம்பத்குமார் வரவேற்றார். காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
பாரதிய இதிகாச சங்கலன சமிதி மாநில அமைப்பு செயலாளர் கதிரவன் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட காரணம் உண்மையான தேசபக்தி கொண்ட ஸ்வயம் சேவகர்கள் தான். தன்னலமில்லாமல் தேசத்தை கட்டமைக்கும் பணியில், லட்சக்கணக்கான சேவகர்கள் ஈடுபட்டதால், இன்று நம் பாரத தேசம் உலகில் உயர்ந்து நிற்கிறது.
நூற்றாண்டு விழாவை ஒட்டி, ஐந்து கடமைகளை நிறைவேற்ற நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்ப நலனை மேம்படுத்த திட்டமிட வேண்டும்.
சமூக நல்லிணக்கம் மேம்பட உழைக்க வேண்டும். சுற்றுச்சூழலை எந்த ரூபத்திலும் கெடுக்காமல் பாதுகாக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஓட்டளித்தல் உள்ளிட்ட முக்கிய கடமைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இவற்றை கடைபிடித்தால், நம் பாரத நாடு மேலும் வலிமை பெறும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மருத்துவர் சுரேஷ் வெங்கடாசலம், கல்வியாளர் அஸ்வினி மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.