/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் வட்டாரக் கலைத்திருவிழா
/
அன்னுாரில் வட்டாரக் கலைத்திருவிழா
ADDED : அக் 15, 2025 11:56 PM

அன்னுார்: அன்னுாரில் நடந்த வட்டாரக் கலைத்திருவிழாவில் 100 பள்ளிகள் பங்கேற்றன.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்த வட்டாரக் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.
அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,200 பேர் பங்கேற்ற கலைத் திருவிழா நடந்தது.
13ம் தேதி துவங்கி, நேற்று வரை போட்டிகள் நடந்தன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் கருவிகளை பயன்படுத்தி இசைத்தல், நாட்டுப்புற நடனம், ஓவியம், நாடகம், செவ்வியல் ஆகிய ஐந்து பிரிவுகளில் 56 போட்டிகள் நடைபெற்றன. முதல் மூன்று இடங்கள் பிடித்தோருக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த மாணவ மாணவியர் அடுத்து நடைபெற உள்ள மாவட்டக் கலைத் திருவிழாவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
பரிசு வழங்கும் விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
சாதித்த மாணவ மாணவியருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் அம்பாள் நந்தகுமார், மனோகரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கள் வாழ்த்து தெரிவித்தன ர்.