/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ- - பாஸ் இன்றி வரும் வாகனங்கள் தகராறில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்
/
இ- - பாஸ் இன்றி வரும் வாகனங்கள் தகராறில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்
இ- - பாஸ் இன்றி வரும் வாகனங்கள் தகராறில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்
இ- - பாஸ் இன்றி வரும் வாகனங்கள் தகராறில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஏப் 07, 2025 09:54 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லார் இ-பாஸ் சோதனை சாவடியில் இ- பாஸ் இன்றி வரும் வாகன ஓட்டிகள் சிலர், இ-பாஸ் எடுக்க சொல்லும் வருவாய் ஊழியர்களிடம் தகராறு செய்கின்றனர்.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 12 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை நடந்து வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகே இ- பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இ- பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி, இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி, வருவாய் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே இ- பாஸ் இல்லாதவர்கள், சோதனை சாவடி ஊழியர்களிடம் கோபம் அடைகின்றனர்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் வருவாய் துறையினர் கூறுகையில், “இச்சோதனை சாவடியில் மிகவும் குறைந்த அளவே வருவாய் துறை ஊழியர்கள் பணி புரிந்து வருகிறோம். நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை. இதனால் அவ்வாகனங்கள், அரசு பஸ்கள் போன்றவைகள் சோதனை செய்வது கிடையாது. ஆனால் பிற மாவட்டங்கள், மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் தேவை. அந்த வாகனங்களை சோதனை செய்யும் போது, முன்னால் சென்ற நீலகிரி வாகனத்தை சோதனை செய்வது கிடையாது, எங்கள் வாகனத்தை ஏன் சோதனை செய்கிறீர்கள் என கோபமடைந்து தகராறில் ஈடுபடுகின்றனர். இ-பாஸ் எடுத்து தர நாங்கள் உதவும் போது, காலதாமதம் ஏற்படுவதால், சுற்றுலா பயணிகள் கோபம் அடைகின்றனர்,” என்றனர்.