/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
6 ரோடுகள் சந்திக்கும் இடம்; சுற்றுலா பயணியர் திணறல்
/
6 ரோடுகள் சந்திக்கும் இடம்; சுற்றுலா பயணியர் திணறல்
6 ரோடுகள் சந்திக்கும் இடம்; சுற்றுலா பயணியர் திணறல்
6 ரோடுகள் சந்திக்கும் இடம்; சுற்றுலா பயணியர் திணறல்
ADDED : ஏப் 07, 2025 05:03 AM

வால்பாறை; வால்பாறையில், ஆறு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டதால், சுற்றுலா பயணியர் குழப்பமடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பு. இந்த சந்திப்பில், சோலையாறு அணை, வால்பாறை, குரங்குமுடி பகுதிக்கு செல்லும் ஆறு ரோடுகள் சந்திக்கின்றன.
இந்த இடத்தில், சுற்றுலா பயணியர் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெரிய வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இந்த இடத்தில், ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை, கடந்த ஆறு மாதத்திற்கு முன் அகற்றினர்.
ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும், இன்று வரை வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை. சிறிய அளவிலான வழிகாட்டி பலகை மட்டுமே வைத்துள்ளனர்.
இதனால், இந்த வழியாக வரும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை, எந்த வழியாக இயக்குவது என தெரியாமல் குழப்பமடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில், பெரிய அளவிலான வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாதா கோவில் சந்திப்பில் சுற்றுலா பயணியர் குழப்பமடையக்கூடாது என்பதற்காக, சிறிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறையினால், கழற்றி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையை மீண்டும் அமைப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சுற்றுலா பயணியர் நலன் கருதி வழிகாட்டி பலகை அமைக்கப்படும்,' என்றனர்.