/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கூரை இல்லாத கல்லாறு இ--பாஸ் சோதனைச்சாவடி சுற்றுலா பயணிகள் அவதி
/
மேற்கூரை இல்லாத கல்லாறு இ--பாஸ் சோதனைச்சாவடி சுற்றுலா பயணிகள் அவதி
மேற்கூரை இல்லாத கல்லாறு இ--பாஸ் சோதனைச்சாவடி சுற்றுலா பயணிகள் அவதி
மேற்கூரை இல்லாத கல்லாறு இ--பாஸ் சோதனைச்சாவடி சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : ஏப் 27, 2025 09:22 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு இ--பாஸ் சோதனைச்சாவடியில் உள்ள 'பூம் பேரியர்' பகுதியில் மேற்கூரை இல்லாததால் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து அவதிப்படுகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு தூரிப்பாலத்தில் இ--பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வாகனங்கள், சுற்றுலா பயணிகள், இ--பாஸ் சோதனை அதிகாரிகள், போலீசார் என அனைவரும் இ--பாஸ்சுக்காக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் நின்று பணிகளை செய்து வருகின்றனர். இதில் பூம் பேரியர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை கிழிந்தும், கம்புகள் உடைந்தும் இருந்ததால், அது மட்டும் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. ஒரு வார காலமாகியும் இன்னும் மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள், போலீசார் என அனைத்து தரப்பினரும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இ--பாஸ் சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ--பாஸ் ஸ்கேன் செய்து வாகனங்களுக்கு வழிவிடுகிறது. இ--பாஸ் இல்லாதவர்களுக்கு இங்கே இ--பாஸ் எடுத்துத்தரப்படுகிறது. இதற்காக வெயிலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இதே நிலைமை தான் இங்குள்ள ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் உள்ளது,' என்றனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.---

