/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிப்பொருளான படகு இல்லம்; சுற்றுலா பயணியர் அதிருப்தி
/
காட்சிப்பொருளான படகு இல்லம்; சுற்றுலா பயணியர் அதிருப்தி
காட்சிப்பொருளான படகு இல்லம்; சுற்றுலா பயணியர் அதிருப்தி
காட்சிப்பொருளான படகு இல்லம்; சுற்றுலா பயணியர் அதிருப்தி
ADDED : ஜூலை 08, 2025 08:49 PM

வால்பாறை; வால்பாறையில், படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக படகு இல்லம் மூடப்பட்டுள்ளதால், படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறியதாவது:
வால்பாறையில் தற்போது பருவமழை பெய்தாலும், சுற்றி பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நகரில் உள்ள படகுசவாரி மூடப்பட்டதால் ஏமாற்றமடைந்துள்ளோம். மழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதியில் குளிக்க முடியாத நிலையில், இது போன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு சுற்றுலா பயணியரை அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக, தாவரவியல் பூங்கா, படகுஇல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'படகு இல்லத்தில் தேங்கி கிடந்த கழிவை அகற்றும் பணியை தொடர்ந்து, படகு சவாரியில் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றப்பட்டது.
சுற்றுலா பயணியர் நலன் கருதி, மழைக்கு பின் விரைவில் படகுஇல்லம் முழுமையாக துார்வாரப்படும். படகுஇல்லத்தில் நடைபாதை சேதமடைந்துள்ளதையும் விரைவில் சீரமைக்கப்படும்,' என்றனர்.