/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட கழிவுகளுடன் பிடிபட்ட 'டிராக்டர்'
/
கட்டட கழிவுகளுடன் பிடிபட்ட 'டிராக்டர்'
ADDED : டிச 20, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ராமநாதபுரம் அருகே கட்டட கழிவுகள் கொட்ட வந்த டிராக்டரை பிடித்த, மாநகராட்சி சுகாதார பிரிவினர், அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
மாநகராட்சி மத்திய மண்டல, 65வது வார்டு சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், சுகாதார மேற்பார்வையாளர் கபீர் ஆகியோர் நேற்று காலை, முனுசாமி நகரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நின்றிருந்த டிராக்டரில், கட்டட கழிவு இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீபதி நகரை சேர்ந்த விஜய், சூர்யா ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

