/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் வர்த்தக மேளா
/
சங்கரா கல்லுாரியில் வர்த்தக மேளா
ADDED : ஜன 08, 2025 11:35 PM

கோவை; சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், பி.பி.ஏ., துறை சார்பில், 'மார்க்கெட்டிங் மேஷப்' என்ற வர்த்தக மேளா நடந்தது.
இதில், சங்கரா கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் சந்தியா, துணை இணைச் செயலாளர் நித்யா ஆகியோர் தலைமை வகித்து, மேளாவை துவக்கி வைத்தனர். சந்தை யுக்திகள், வாடிக்கையாளர்களை ஈர்த்தல், பிராண்டிங் குறித்து விளக்கினர். பேஷன், எலக்ட்ரானிக்ஸ், ஆக்சரிஸ், உணவுகள், விளையாட்டு என 17க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்டு ஆகியோர் மேளாவில் வெற்றி பெற்ற துறை தலைவர் கவிதா, உதவி பேராசிரியர்கள் புவனேஸ்வரி, கலையரசி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

