/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சங்க தகராறு வழக்கு; 15 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு
/
தொழிற்சங்க தகராறு வழக்கு; 15 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு
தொழிற்சங்க தகராறு வழக்கு; 15 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு
தொழிற்சங்க தகராறு வழக்கு; 15 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு
ADDED : ஜூலை 22, 2025 06:27 AM
கோவை; தி.மு.க.., தொழிற்சங்க தகராறு வழக்கில், 15 ஆண்டுக்கு பிறகு, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கோவை, பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலை சங்கம் (எல்.பி.எப்.,), பொது செயலாளராக துரைசாமி, பொருளாளராக பார்த்தசாரதி ஆகியோர் இருந்தனர். இச்சங்கத்திற்கு, 60 க்கும் மேற்பட்ட இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இதன் தலைமை அலுவலகம், கோவை, டாடாபாத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், 1993ல் வைகோ, தி.மு.க.,விலிருந்து பிரிந்து, ம.தி.மு.க., என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு, துரைசாமி தனது கட்டுப்பாட்டில் தொழிற்சங்கத்தை நடத்தினார்.
இதனால், தி.மு.க., வை சேர்ந்த பார்த்தசாரதி தலைமையில், புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு, டாடாபாத்திலுள்ள தொழிற்சங்க அலுவலகத்துக்கு சென்றனர்.
அப்போது இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொழிற்சங்க அலுவலகம் தொடர்பாக இருதரப்பும் தனித்தனியாக, சிவில் வழக்கு தொடுத்தனர்.
இதற்கிடையில், கடந்த 2010, ஏப்., 12 ல், கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் துரைசாமி தனிப்புகார் மனு தாக்கல் செய்தார். அதில், பார்த்தசாரதி, பாண்டி, சிவகுமார், ராமசாமி உள்ளிட்டோர் சேர்ந்து, தொழிற்சங்க அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சொத்து ஆவணங்களை திருடி சென்று விட்டதாக தெரிவித்து இருந்தார்.
எதிர் தரப்பில் வக்கீல் பி.ஆர்.அருள்மொழி ஆஜராகி வாதிடுகையில், ''சொத்து ஆவணம் திருடப்பட்டதாக புகார் கொடுத்தவர், அதே சொத்தை , ஆவணங்கள் சேதமடைந்து விட்டதாக கூறி பின்னாட்களில் விற்பனை செய்துள்ளார்,'' என்று வாதிட்டார்.
இது தொடர்பான வழக்கில், கடந்த 15 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால், பார்த்தசாரதி உள்ளிட்ட நால்வரை விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.