/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 13, 2026 05:05 AM
மேட்டுப்பாளையம்: -: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
---------காரமடையில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரமடை கார் ஸ்டாண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க.,உள்ளிட்ட கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
----கோவில்பாளையம்- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை சீர்குலைக்க கூடாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதை மசோதா 2025ஐ வாபஸ் பெற வேண்டும். 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

