/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சங்கங்கள் 'ஸ்டிரைக்' வங்கிகளில் பணிகள் பாதிப்பு
/
தொழிற்சங்கங்கள் 'ஸ்டிரைக்' வங்கிகளில் பணிகள் பாதிப்பு
தொழிற்சங்கங்கள் 'ஸ்டிரைக்' வங்கிகளில் பணிகள் பாதிப்பு
தொழிற்சங்கங்கள் 'ஸ்டிரைக்' வங்கிகளில் பணிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 09, 2025 10:27 PM
கோவை; மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால், தபால் துறை மற்றும் வங்கிகளில், 40 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டன.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உட்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள், நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொண்டன.
இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், காப்பீடு ஊழியர் சங்கங்கள் உட்பட, பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஊழியர்கள் பலர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், தபால் துறை மற்றும் வங்கிகளில், 40 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டன.