/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்
/
தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்
ADDED : பிப் 17, 2024 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவையில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், இப்போராட்டம் நடந்தது. டில்லியில் விவசாயிகள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், உள்ளிட்ட 26ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது. இதில், எல்.பி.எப்.,- ஐ.என்.டி.யு.சி.,- ஏ.ஐ.டி.யு.சி.,- சி.ஐ.டி.யு., உள்ளிட்ட பல தொற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.