/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்தடை நாளில் மாற்றம்; வியாபாரிகள் கோரிக்கை
/
மின்தடை நாளில் மாற்றம்; வியாபாரிகள் கோரிக்கை
ADDED : டிச 24, 2024 07:02 AM
அன்னுார்; 'மாதாந்திர மின்தடை நாளில் மாற்றம் செய்ய வேண்டும்,' என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரியாம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கரியாம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம், அன்னுார் நகர் பகுதிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக,ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளியன்று, காலை 9 : 00 மணி முதல், மாலை 6 : 00 மணி வரை, பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன், மின் தடை நாள் வெள்ளிக்கிழமைக்கு பதில் மூன்றாவது சனிக்கிழமைக்கு மின்வாரியத்தினர் மாற்றினர்.
இதுகுறித்து அன்னுார் நகர வியாபாரிகள் கூறுகையில், 'அன்னுார் வட்டாரத்தில், ஸ்பின்னிங் மில், இன்ஜினியரிங் தொழிற்சாலை, பவுண்டரிகள், விசைத்தறிகள் அதிக அளவில் உள்ளன. வார சந்தை சனிக்கிழமையன்று கூடுகிறது. எனவே சனிக்கிழமை தான் அதிக அளவில் வியாபாரம் நடைபெறும். அன்று மின்தடை செய்வதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறோம். வியாபாரம் கடுமையாக பாதித்து வருமான இழப்பு ஏற்படுகிறது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்பு போல மூன்றாவது வெள்ளியன்று மின் தடை செய்தால் வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது சனிக்கிழமைக்கு பதில், வேறு நாளில் மாதாந்திர மின் தடை செய்ய வேண்டும். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.