/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டை மாற்ற வியாபாரிகள் கோரிக்கை
/
எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டை மாற்ற வியாபாரிகள் கோரிக்கை
எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டை மாற்ற வியாபாரிகள் கோரிக்கை
எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டை மாற்ற வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஆக 16, 2025 09:22 PM
கோவை; கோவை மேட்டுப்பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட் உள்ள பகுதியில் பாலம் கட்டும் பணி நடப்பதால், திருமலையம் பாளையம் காய்கறி மொத்த மார்க்கெட் அமைக்கப்பட உள்ள இடத்தில் தற்காலிகமாக, மொத்த காய்கனி வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, எம்.ஜி.ஆர்.மார்க்கெட் மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., மொத்த காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து, அரசு ஒத்துழைப்புடன் கோவை திருமலையாம் பாளையத்தில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில் நவீன காய் கனி மார்க்கெட் உருவாக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், 90 நாட்களுக்கு மார்க்கெட்டுக்கு முன்புறம் உள்ள அழகேசன் சாலையில் இருந்து எருக்கம்பெனி சாலை வரை, கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், வியாபாரிகள் சரக்கு பரிமாற்றம் செய்வது சிரமமாக உள்ளது. இங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள் தடைபட்டுள்ளன.
அதனால் திருமலையம்பாளையத்தில் மார்க்கெட் அமைக்கப்பட உள்ள இடத்தில் தற்காலிகமாக, 85 வியாபாரிகளுக்கு மொத்த காய்கனி வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.