/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரிகள் போராட்டம்; வரும், 11ல் நடக்கிறது
/
வியாபாரிகள் போராட்டம்; வரும், 11ல் நடக்கிறது
ADDED : டிச 01, 2024 10:56 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தொழில் வர்த்தக சபை கட்டடத்தில் நடந்தது. சங்கத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து, செயலாளர் ஹரிகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்தும் வாடகையில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த மத்திய அரசு, உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த சட்டத்தினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டத்தை எதிர்த்து, வரும், 11ம் தேதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வரி செலுத்தும் வியாபாரிகளிடம் கருத்து கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.