தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


UPDATED : அக் 23, 2026 07:23 PM

ADDED : அக் 23, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 07:23 PM ADDED : அக் 23, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டுப்பாளையம்–ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகளில் அடுத்தடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. தீயணைப்புத் துறையினரின் துரிதமான செயலால் மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதை சாலையில், பர்லியாறு அருகே உள்ள இரும்பு பாலம் பகுதியில் மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்தது. இதேபோல், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் முதலாம் வளைவு அருகே மற்றொரு மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் இந்த வழித்தடத்திலும் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் அனில் குமார் தலைமையில் வந்த வீரர்கள், இரண்டு தனித்தனி குழுக்களாகப் பிரிந்தனர்.

ஒரு குழு பரளியாறு இரும்பு பாலம் பகுதிக்கும், மற்றொரு குழு கோத்தகிரி சாலை முதலாம் வளைவு பகுதிக்கும் ஒரே நேரத்தில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர்.

இதனால் இரு சாலைகளிலும் விழுந்த மரங்கள் மிகக் குறுகிய காலத்தில் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வாகனங்கள் வழக்கம் போல் தடையின்றி சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us