/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
/
போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி; பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 03, 2024 11:59 PM

உடுமலை: மடத்துக்குளம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸ், ஜெ.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளி சார்பில், சாலை பாதுகாப்பு -போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
மடத்துக்குளம் நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார், பேரணியை துவக்கி வைத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., கோமதி, எஸ்.எஸ்.ஐ., சக்திவேல், போக்குவரத்து எஸ்.ஐ., கண்ணன், வக்கீல்கள் சின்ராம், கணேஷ்குமார், வீரபாபு மற்றும் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் துவங்கி, பழநி - -உடுமலை ரோடு, பஸ் ஸ்டாண்ட், நால் ரோடு, வழியாக சென்று மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
இதில், போக்குவரத்து விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகள் ஏந்தியும், நோட்டீஸ் வினியோகித்தும், மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்க்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.