/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்தில் அரசு பஸ் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
/
பாலத்தில் அரசு பஸ் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
பாலத்தில் அரசு பஸ் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
பாலத்தில் அரசு பஸ் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
ADDED : ஜூலை 21, 2025 10:32 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலத்தின் மீது வந்த, அரசு பஸ் டயர் பஞ்சர் ஆனதால், ஒரு மணி நேரத்திற்கு மேல், போக்குவரத்து ஸ்தம்பித்ததால், பயணிகள் அவதிப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து நேற்று மதியம், பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் நகரின் நுழைவு வாயிலில் உள்ள, பவானி ஆற்று பாலத்தின் மீது வரும் போது, பஸ்ஸின் முன் சக்கரம் பஞ்சர் ஆகி நடு பாலத்தில் சாலையில் நின்றது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பாலத்தின் மீது பஸ்ஸை ஓரமாக நிறுத்திய பின்பு, ஒவ்வொரு வாகனங்களாக செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்தனர். பாலத்தின் மீது அரசு பஸ் நின்றதால் ஊட்டி, கோத்தகிரி சாலைகளில் வந்த வாகனங்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி நோக்கி சென்ற வாகனங்களும், செல்ல போதிய வழித்தடம் இல்லாததால், ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றன. மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசார் வாகனங்களை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இருந்த போதும் ஊட்டி, கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாற்று டயர் பஸ்ஸிற்கு பொருத்தி, அங்கு இருந்து எடுத்துச் சென்றனர். இதனால் மாலை, 6:00 மணி வரை நகரிலும், பவானி ஆற்று பாலத்தின் மீதும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.
விரைவில் பவானி ஆற்றின் குறுக்கே நான்கு வழி சாலையுடன் கூடிய, புதிய பாலம் அமைத்தால் மட்டுமே, இது மாதிரியான விபத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, தீர்வு காண முடியும் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

