தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விஜய் வருகைக்காக போக்குவரத்து மாற்றம்

 விஜய் வருகைக்காக போக்குவரத்து மாற்றம்

 விஜய் வருகைக்காக போக்குவரத்து மாற்றம்


ADDED : ஏப் 14, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 10:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: த.வெ.க., தலைவர் விஜய் நேற்று விமான நிலையத்தில் இருந்து வெளியேறியதும், நகர எல்லை வரை வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தார்.

விஜய் வருகையை முன்னிட்டு மதியம் முதலே கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பெருமளவில் சாலையில் காத்திருந்தனர். லட்சுமி மில்ஸ் முதல் அவிநாசி சாலை இறுதி வரை பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், பயணிகள் சிரமப்பட்டனர்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, சேலம், கொச்சின் தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக நான்கு முறை, தலா பத்து நிமிடங்கள் வீதம் மூடப்பட்டன. அந்த நேரங்களில் வாகனங்கள் சர்வீஸ் சாலைகள் வழியாக மாற்றி அனுப்பப்பட்டன.

நெரிசல் அதிகரித்ததை தொடர்ந்து, லட்சுமி மில்ஸ் பகுதியில் இரண்டு மணி நேரம் கனரக வாகனங்களுக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்தி, திருச்சி சாலை வழியாக அனுமதி வழங்கப்பட்டது. இருந்தாலும், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராக சற்று தாமதமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us