ADDED : பிப் 14, 2026 05:04 AM
கோவை: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில், பல்வேறு ஹிந்து அமைப்பினர், இன்று மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். இதையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று காலை 6 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வெங்கடசாமி ரோடு, பொன்னுரங்கம் ரோடுகளில் வாகன பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து ஆர்.எஸ்.புரம் வழியாக லாலிரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சிந்தாமணி சந்திப்பு, பெரியசாமி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
புரூக்பாண்ட் சாலை, சிந்தாமணி ரவுண்டானாவிலிருந்து டி.பி. ரோடு, ஆர்.எஸ்.புரம் வழியாக லாலிரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பெரியசாமி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
சிந்தாமணியில் இருந்து காந்திபார்க்குக்கு செல்லும் வாகனங்கள் பெரியசாமி ரோடு வழியாக தடாகம் ரோடு அடைந்து செல்ல வேண்டும்.
காந்திபார்க் ரவுண்டானாவிலிருந்து டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் வரும் வாகனங்கள் மெக்ரிக்கர் ரோடு வந்து, பூமார்க்கெட் வழியாக மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
லாலிரோடு ரவுண்டானாவிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரும் அனைத்து வாகனங்களும், மேற்கு சம்பந்தம் ரோடு, டி.பி. ரோடு, கிழக்கு சம்பந்தம் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.
ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, டி.வி.சாமி ரோடு கிழக்கு மற்றும் மேற்கு கவுலிபிரவுன் சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.புரம் மற்றும் கவுலிபிரவுன் ரோடு, மருதமலை ரோடுகளில் கனரக சரக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
