/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் வருகையையொட்டி நாளை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
/
பிரதமர் வருகையையொட்டி நாளை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் வருகையையொட்டி நாளை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் வருகையையொட்டி நாளை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : நவ 18, 2025 04:29 AM
கோவை: கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க, பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார். அவரது வருகையையொட்டி, கோவை மாநகர பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை பகல் 12:00 முதல் மாலை, 4:00 மணி வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
n சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மாநகருக்குள் வரும், பஸ் மற்றும் கனரக வாகனங்கள், நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக, சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.
n நகரில் இருந்து அவிநாசி ரோடு வழியாக, வெளியே செல்லும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில் சந்திப்பில், யூ டர்ன் செய்து, புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்டு டி., பைபாஸ் வழியாக செல்லலாம்.
n நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள், தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோளப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
n நகருக்குள் இருந்து அவிநாசி ரோடு வழியாக, செல்லும் அரசு பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள், அவிநாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் 'யு டர்ன்' செய்து காமராஜர் ரோடு, சிஙகாநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். நகருக்குள் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள், நேரத்திற்கு தகுந்தாற் போல் சிட்ரா வழியாக அனுப்பப்படும்.
n நாளை பகல், 12:00 முதல் மாலை, 3:00 மணி வரை விமான நிலையத்திற்குள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தடை செய்யப்படுகிறது. நாளை விமான நிலையத்திற்கு வருபவர்கள், 12.00 மணிக்கு முன்பாக வர வேண்டும். 12.00 மணிக்கு மேல் வருபவர்கள், சிட்ரா சந்திப்பில் இறங்கி, விமான நிலையத்துக்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
n அவிநாசி ரோடு, ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், பிரதமர் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, பகல் 12:00 முதல் மாலை 3:00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்கு தகுந்தாற்போல், மாற்று பாதையை தேர்வு செய்து செல்ல வேண்டும்.
n காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் நகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

