/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லட்சுமி மில்ஸ் காலனியில் நிரம்பி வழிகிறது சாக்கடை கால்வாய்
/
லட்சுமி மில்ஸ் காலனியில் நிரம்பி வழிகிறது சாக்கடை கால்வாய்
லட்சுமி மில்ஸ் காலனியில் நிரம்பி வழிகிறது சாக்கடை கால்வாய்
லட்சுமி மில்ஸ் காலனியில் நிரம்பி வழிகிறது சாக்கடை கால்வாய்
ADDED : நவ 18, 2025 04:28 AM

நிரம்பி வழியும் சாக்கடை பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ் காலனி, எஸ்.என்.ஆர்.,வீதியில் சாக்கடை முறையாக சுத்தம் செய்வதில்லை. கால்வாயில் சாக்கடை நீர் நிரம்பி வழிகிறது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
- குணசேகரன்: தெருவிளக்கு பழுது மாநகராட்சி, 40வது வார்டு, 'எஸ்.பி - 7, பி - 39 ' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியே செல்ல பாதுகாப்பில்லை. பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாதிப்படைகின்றனர்.
- மகா: சாலையில் ஓடும் கழிவுநீர் சத்தி ரோடு, 19வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில், கடந்த ஒரு வாரமாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- சாக்சி: நாய் தொல்லை பொன்னையராஜபுரம் ரோட்டில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.
- சங்கர்: மழையில் முளைக்கும் குளம் மாநகராட்சி, 24வது வார்டு, டாக்டர் ஜெகநாதர் நகர், நான்காவது தெருவில், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், சாலையில் குளம் போல மழைநீர் தேங்குகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- பாலு: குவியும் குப்பை வடவள்ளி, தொண்டாமுத்துார் ரோடு, ஐஸ்வர்யா நகர், கே.ஆர். பேக்கரி அருகே சாலையோரம், காலியிடத்தில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
- குமார்: பொதுப்பாதை ஆக்கிரமிப்பு இடையர்பாளையம் பிரிவு, 93வது வார்டு, குனியமுத்துார், மணிகண்டன் நகரில் பொதுப்பாதை தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பொதுப்பாதையை மீட்க வேண்டும்.
- சுசி பழனி: பூங்காவில் மிரட்டும் நாய் காந்தி பூங்காவில் காலை, மாலை வேளையில் அதிகம் பேர் நடைப்பயிற்சி செல்கின்றனர். குழந்தைகள் மாலை நேரங்களில் பூங்காவினுள் விளையாடுகின்றனர்.பூங்காவில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நடைப்பயிற்சிக்கு செல்வோர், குழந்தைகளை நாய்கள் கடிக்க வருகின்றன.
- ஆறுச்சாமி: இடையூறாய் மின்கம்பம் உடையாம்பாளையம், இந்துஸ்தான் கல்லுாரி வழியில், கவுதம் அபார்ட்மென்ட் அருகே, சாலையில் இடையூறாக மின்கம்பம் உள்ளது. குறுகலான சாலையில் ஓரத்தில் உள்ள இந்த மின்கம்பத்தால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- சாமிநாதன்: குப்பையை தடுக்க தண்டனை அஜ்ஜனுார் ரோடு, 39வது வார்டு, காயத்ரி கோவில், சாலையில் மூட்டை, மூட்டையாய் குப்பை கொட்டப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் குப்பையை அகற்றவில்லை. குப்பையை அகற்றுவதுடன், திறந்தவெளியில் குப்பை கொட்டுவோருக்கு, கடும் தண்டனை வழங்க வேண்டும்.
- கிருஷ்ணமூர்த்தி:

