/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
/
சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 12, 2025 10:05 PM
வால்பாறை; வால்பாறையில், பஸ் ஸ்டாண்டிலிருந்து போஸ்ட் ஆபீஸ் வரையுள்ள ஒரு கி.மீ., துாரத்துக்கு, ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இது தவிர, சுற்றுலா வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக சரக்கு வாகனங்களை பகல் நேரத்தில் நடுரோட்டில் நிறுத்தி, பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், கடுமையாக பாதிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்கள் கூறுகையில், 'சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் பொருட்களை, காலை, 9:00 மணிக்கு முன்னதாக கடைகளில் இறக்க போலீசார் அறிவுறுத்த வேண்டும். விதிமுறை மீறி ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். கனரக வாகனங்கள் வால்பாறை நகர் வழியாக செல்லாமல், ரொட்டிக்கடை வழியாக செல்ல அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்.