/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
/
கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 05, 2025 10:41 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டின் இருபுறத்திலும் ஏராளமான கடைகள், வணிக வளாகம், திருமண மண்டபம், பேங்க் உள்ளிட்டவைஉள்ளன. இங்கு வரும் மக்கள், பைக், கார் போன்றவற்றை ரோட்டோரம் நிறுத்தி செல்கின்றனர்.
தற்போது, இந்த ரோட்டில் பேரூராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. அதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சொலவம்பாளையம் இணைப்பு ரோடு அருகே போலீசார் தடுப்புகள் வைத்து, கனரக வாகனங்கள் அவ்வழியாக அனுப்புகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக டிப்பர் லாரிகள் மற்றும் காஸ் லாரிகள் மாற்று பாதையில் செல்லாமல், கால்வாய் பணிகள் மேற்கொள்ளும் பாதை வழியாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், ரோட்டோரம் 'பார்க்கிங்' செய்யப்பட்ட வாகனங்களை எடுத்து செல்வதில் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கால்வாய் பணிகள் முடியும் வரை, போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில், கனரக வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.