/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து சீரமைக்கும் பணி இன்றும், நாளையும் நேர்காணல்
/
போக்குவரத்து சீரமைக்கும் பணி இன்றும், நாளையும் நேர்காணல்
போக்குவரத்து சீரமைக்கும் பணி இன்றும், நாளையும் நேர்காணல்
போக்குவரத்து சீரமைக்கும் பணி இன்றும், நாளையும் நேர்காணல்
ADDED : டிச 01, 2024 01:18 AM
கோவை: கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநகர போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும், டிராபிக் வார்டன் அமைப்பு லாப நோக்கம் இல்லாத தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சேர்ந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கோவையில் வசிப்பவராக இருக்க வேண்டும். 25ல் இருந்து, 45 வயதுக்குள் இருக்க வேண்டும், நல்ல ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும். மேலும், குற்றப் பின்னணி இல்லாதவராக இருத்தல் அவசியம்.
இதற்கான நேர்காணல் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையும், நாளை மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரையும் கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் உள்ள டிராபிக் வார்டன் அலுவலகத்தில் நடைபெறுகிறது. சந்தேகங்களுக்கு, 99941 85221 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

