ADDED : ஜன 06, 2026 05:09 AM

கோவை: அவிநாசி ரோட்டில் 'யூ டேர்ன்' பகுதியில் நிறுத்தப்படும் கார்களால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அவிநாசி ரோட்டில் சந்திப்புகளில், மையத்தடுப்பு கற்கள் வைத்து தற்காலிகமாக அடைப்பு ஏற்படுத்தியிருப்பதோடு, 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு திரும்பும் இடங்களில், எதிர்திசையில் வரும் வாகனங்களின் வேகத்தை பார்த்து, ஒவ்வொரு வாகனமாக கடப்பதால், மற்றவை வரிசையாக பின்னால் தேங்குகின்றன.
இதனால், நேராக செல்வோர் திணறுகின்றனர். 'யூ டேர்ன்' திரும்பும் இடத்தில் ரோட்டோரத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
'நோ பார்க்கிங்' என போலீசாரால் அறிவிப்பு பலகை நிறுவப்பட்டிருக்கிறது. பொருட்படுத்தாமல் அதன் கீழேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போலீசார் நின்றிருந்தாலும் தடுப்பதில்லை.
உதாரணத்துக்கு, லட்சுமி மில்ஸ் ஸ்டாப் 'யூ டேர்ன்' திருப்பத்தை கடந்து வரும்போது, ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கவனிக்கலாம். இதேபோல், அண்ணாதுரை சிலை சந்திப்பு அருகிலும் கார்கள் நிறுத்தப்படுகின்றன. விபத்து தவிர்க்க, 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.
