/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3,000 இலவச ஹெல்மெட் வழங்க போக்குவரத்து போலீசார் திட்டம்
/
3,000 இலவச ஹெல்மெட் வழங்க போக்குவரத்து போலீசார் திட்டம்
3,000 இலவச ஹெல்மெட் வழங்க போக்குவரத்து போலீசார் திட்டம்
3,000 இலவச ஹெல்மெட் வழங்க போக்குவரத்து போலீசார் திட்டம்
ADDED : ஏப் 02, 2025 07:06 AM

கோவை : அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, 3,000 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்க, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விபத்தில்லா கோவையைஉருவாக்க, மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு, இலவச ஹெல்மெட் அளித்து, ஹெல்மெட் அணிவதன் கட்டாயத்தை எடுத்து கூறினர்.
தற்போது, மாநகர போக்குவரத்து போலீசார், ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் எலிக்ஸர் பவுண்டேசனுடன் இணைந்து, துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட, 3,000 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்க திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக கடந்த வாரம், 500 துாய்மை பணியாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் கூறுகையில், ''இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணிந்து சென்ற பலர், உயிர் தப்பியுள்ளனர்.
இதனை வலியுறுத்தி, அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த, 3,000 ஹெல்மெட் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

