/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து போலீசாருக்கு 'குளு குளு' ஹெல்மெட்
/
போக்குவரத்து போலீசாருக்கு 'குளு குளு' ஹெல்மெட்
ADDED : மே 15, 2025 12:20 AM

கோவை,; வெயிலில் போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடும் போலீசாருக்கு, 'ஏசி ஹெல்மெட்' வழங்கப்பட்டது.
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை, 11:00 முதல் 2:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடுமையான வெயிலில் சாலையில் நின்று போக்குவரத்தை கவனிக்கும் போலீசாரை, பாதுகாக்கும் வகையில், தனியார் அமைப்பில் சி.எஸ்.ஆர்., நிதி உதவியோடு 'ஏசி ஹெல்மெட்' வழங்கும் நிகழ்வு, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
36 போக்குவரத்து போலீசாருக்கு, 'ஏசி ஹெல்மெட்டை' மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழங்கினார். போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், ''ஒரு ஹெமெட்டின் மதிப்பு ரூ. 15 ஆயிரம். இரண்டு மணி நேரம் இதை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதிலிருந்து வரும் குளுமையான காற்று, வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஹெல்மெட்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.