/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தல்; எட்டு பேரை சிறையிலடைத்த போலீசார்
/
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தல்; எட்டு பேரை சிறையிலடைத்த போலீசார்
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தல்; எட்டு பேரை சிறையிலடைத்த போலீசார்
வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தல்; எட்டு பேரை சிறையிலடைத்த போலீசார்
ADDED : ஜன 14, 2025 06:59 AM
கோவை; விற்பனைக்காக கஞ்சா கடத்திய எட்டு பேரை, போலீசார் சிறையில் அடைத்தனர். இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை, பீளமேடு போலீசார், புதூர் மாரியம்மன் கோவில் அருகில், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கிஷோர், 24 என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் கஞ்சா இருந்தது.
விசாரணையில், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வது தெரிந்தது. மேலும், வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த நீலிகோணம்பாளையம் அபி விஷ்ணு, 23, ராமநாதபுரத்தை சேர்ந்த, தீபன்ராஜ், 22, சவுரிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ், 26, வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த, தினேஷ், 25, புலியகுளத்தை சேர்ந்த பிரவீன்குமார், 27, செட்டிபாளையத்தை சேர்ந்த சூர்யா, 20, அம்மன்குளத்தை சேர்ந்த சரண்குமார், 24 ஆகியோரை பிடித்து, சிறையில் அடைத்தனர்.
அங்கு நடத்திய சோதனையில், இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வரும் இவர்கள், தங்களுக்குள் பிரித்துக் கொண்டு கோவையின் பல்வேறு பகுதிகளிலும், விற்பனை செய்து வந்துள்ளனர். அதன் வாயிலாக கிடைக்கும் பணத்தைக் கொண்டு, சுகபோகமாக இருந்துள்ளனர்.
இவர்களிடம் கஞ்சா தவிர, பிளாஸ்டிக் கவர்கள், கஞ்சாவை எடை போட்டு விற்க எலக்ட்ரானிக் எடை எந்திரம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது' என்றனர்.