/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டையில் சிக்கிய முட்டை உயிரை பறித்த சோகம்
/
தொண்டையில் சிக்கிய முட்டை உயிரை பறித்த சோகம்
ADDED : செப் 07, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; உணவருந்தும்போது முட்டை தொண்டையில் சிக்கி, பீஹார் மாநிலத்தவர் ஒருவர் பலியானார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் சகானி, 46. கோவை காரமடை அருகே சாரதா நகரில் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வேகவைத்த முட்டை தொண்டையில் சிக்கியது. இதனால், மூச்சு விட முடியாமல் தவித்தார்.உடனடியாக அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.-