/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்
/
பராமரிப்பு பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்
ADDED : ஜூலை 13, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சேலம் கோட்ட ரயில்வேயின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - டாட்டா நகர்(18190) எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 15, 17 ம் தேதிகளில் போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில் இயக்கப்படும். அதேபோல், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில், 15, 17 ம் தேதிகளில் போத்தனுார் - இருகூர் ரயில் பாதையில் இயக்கப்படும்.
இந்த ரயில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில், மதியம் 12:17 மணிக்கு நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.