/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்பதிவு கவுன்டர் துவங்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
/
முன்பதிவு கவுன்டர் துவங்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
முன்பதிவு கவுன்டர் துவங்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
முன்பதிவு கவுன்டர் துவங்க ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 30, 2026 08:12 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர் துவங்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டஷனுக்கு பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவை சுற்றிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் ரயில்வே ஸ்டேஷனில் அதிகளவு பயணியர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில், சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
இப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் பணியாற்றுவோர், விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும், சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய சிரமப்படுகின்றன.
குறிப்பாக, பண்டிகை நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, ரயில் பயணியர் நலன் கருதி கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீசில் புதிதாக ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர் துவங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பயணியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

