/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பிடத்துக்கு பூட்டு; ரயில் பயணியர் அவதி
/
கழிப்பிடத்துக்கு பூட்டு; ரயில் பயணியர் அவதி
ADDED : அக் 17, 2024 10:23 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிருந்து, தினமும், 200க்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில், 400 பயணியர் வரை ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
கழிப்பிடங்களை திறந்து வைத்தால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்த பயன்படுத்துவதால் பூட்டியுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, கழிப்பிடத்தின் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய வேண்டும். மேலும், பயணியர் பயன்பாட்டிற்கு கழிப்பிடங்களை திறந்து விட வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.