தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் நிறுத்த அறிவிப்பு 'ஓகே'; வசதிகளையும் மேம்படுத்துங்க

ரயில் நிறுத்த அறிவிப்பு 'ஓகே'; வசதிகளையும் மேம்படுத்துங்க

ரயில் நிறுத்த அறிவிப்பு 'ஓகே'; வசதிகளையும் மேம்படுத்துங்க


ADDED : ஆக 20, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; சிங்கநல்லுார், இருகூர் ரயில் நிலையங்களில் மீண்டும் நிறுத்தம் அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளது.

இதன் கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் அறிக்கை:

கோவிட் காலத்தில் சிங்கநல்லுார், இருகூர் ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்துவது ரத்து செய்யப்பட்டது; மீண்டும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

சோமனுார், திருப்பூர், ஈரோடு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பயணிகள் சிங்கநல்லுார், இருகூர் சுற்றுப்பகுதிகளில் இருந்து, பயணம் செய்து வந்தனர்.

சமீபத்தில் கோவை வந்திருந்த ரயில்வே அமைச்சரிடம், 'கோவை -நாகர்கோவில், பாலக்காடு- திருச்சி உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும்' என, மனு அளித்தோம்.

இருகூர், சிங்கநல்லுார் ரயில் பயணிகள் சங்கத்தினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, தென்னக ரயில்வேக்கு மனு அளித்திருந்தனர். கோரிக்கைகளை ஏற்று, நிறுத்தங்கள் அறிவித்த ரயில்வேக்கு நன்றி.

அதேசமயம், கோவையின் அதிவேக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நகருக்குள் இருக்கும் இவ்விரு ரயில்நிலையங்களிலும், பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us