sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அமலுக்கு வந்தது ரயில்களின் நேர மாற்றம் அதிகாரிகள் தகவல்

/

 அமலுக்கு வந்தது ரயில்களின் நேர மாற்றம் அதிகாரிகள் தகவல்

 அமலுக்கு வந்தது ரயில்களின் நேர மாற்றம் அதிகாரிகள் தகவல்

 அமலுக்கு வந்தது ரயில்களின் நேர மாற்றம் அதிகாரிகள் தகவல்


ADDED : ஜன 02, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேர அட்டவணை நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

அதில், சென்னையில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பாலக்காடு டவுனுக்கு காலை, 8:40 மணிக்கு வந்து, 8:45 மணிக்கு கிளம்பியது. தற்போது, பாலக்காடு டவுனுக்கு, 8:30 மணிக்கும், பாலக்காடு சந்திப்புக்கு காலை, 9:10 மணிக்கு வந்து சேரும்.

அதே போன்று, பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், பாலக்காட்டில் இருந்து மாலை, 4:10 மணிக்கு கிளம்பிய ரயில், 3:50 மணிக்கு கிளம்புகிறது. பாலக்காடு டவுனுக்கு மாலை, 4:20 மணிக்கு வந்ததற்கு பதிலாக, 4:02 மணிக்கு வந்து, 4:04க்கு புறப்படுகிறது.

பொள்ளாச்சிக்கு மாலை, 5:12 மணிக்கு வந்து, 5:15 மணிக்கு கிளம்பிய ரயில், மாலை, 4:47 மணிக்கு பொள்ளாச்சி சந்திப்புக்கு வந்து, 4:50 மணிக்கு புறப்படுகிறது.

பாலக்காடு - திருச்செந்துார் ரயில், பொள்ளாச்சி சந்திப்புக்கு, காலை, 7:18 மணிக்கு வந்து, 7:20 மணிக்கு கிளம்பியது. காலை, 7:35 மணிக்கு வந்து, 7:40 மணிக்கு கிளம்புகிறது.

திருவனந்தபுரம் மத்திய ரயில் சந்திப்பில் இருந்து, ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், பாலக்காட்டில் இருந்து அதிகாலை, 4:20 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடு டவுனுக்கு, 4:35 மணிக்கு கிளம்புகிறது. கொல்லங்கோட்டில் காலை, 5:02 மணிக்கு கிளம்பி, பொள்ளாச்சிக்கு, 5:47 மணிக்கு வருகிறது. அங்கு இருந்து, 5:50 மணிக்கு புறப்படுகிறது.துாத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், பொள்ளாச்சிக்கு ஏற்கனவே காலை, 4:45 மணிக்கு வந்து, 4:50 மணிக்கு புறப்பட்டது.

தற்போது, புதிய நேரப்படி காலை, 5:15 மணிக்கு வந்து, 5:20 மணிக்கு புறப்படுகிறது.கிணத்துக்கடவுக்கு காலை, 5:29 மணிக்கு சென்று, 5:30 மணிக்கு புறப்பட்ட ரயில் தற்போது, 5:49 மணிக்கு வந்து, 5:50 மணிக்கு புறப்படுகிறது. இந்த நேர மாற்றம், நேற்று முதல் அமலுக்கு வந்ததாக பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us